தஞ்சாவூர் பெசன்ட் லாட்ஜ் கூட்ட அரங்கில் சமூக நலத்துறை சார்பாக சர்வதேச முதியோர் தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் தலைமையில் இன்று (14.10.2016) நடைபெற்றது.
முதியோர் தின விழாவில் முதியோர்களுக்கான மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து மற்றும் 90 வயதிற்கு மேற்பட்ட சுமார் 120 முதியோர்களை கௌரவித்து, பேச்சு போட்டி, பாட்டுப் போட்டி, வேகநடை போட்டி, இசை நாற்காலி போட்டி, நடன போட்டி, மெதுவாக நடத்தல் போட்டி, பந்து விளையாட்டிப் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது,
இன்றைய தினம் உலக அளவில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்படுகிறது. முதியோர்கள் நலமுடன் வாழ தமிழக அரசால் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், முதியோர்கள் உடல்நிலை காப்பதற்காக மருத்துவ காப்பீடு திட்டம், முதியோர் இல்லம், முதியோர்களுக்கான மருத்துவ முகாம் போன்ற திட்டங்கள் முதியோர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் முதியோர்கள் உள்ளனர். நமது நாட்டில் முதியோர்களின் சதவிகிதம் மேற்கத்திய நாடுகளை விட குறைவாக உள்ளது. வாரிசுகளை நல்ல முறையில் வளர்த்து கடைசி காலத்தில் கைவிடப்பட்டாலும், நமது அரசால் அனைத்துவிதமான உதவிகளும் முதியோர்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.
முதியோர்களின் நலனுக்காகவும், முதியோர்களை காப்பதற்காகவும் மாவட்டத்தில் கடுவெளி ஸ்ரீ வெங்கடேஸ்வரா முதியோர் இல்லம், சித்திரக்குடி பகல்நேர விடுதி, பூதலூர் ஆர்.வி.பகல்நேர விடுதி, தஞ்சாவூர் மார்கிரேட் பகல்நேர விடுதி, தஞ்சாவூர் விக்டோரியா முதியோர் இல்லம், தஞ்சாவூர் பாரதமாதா முதியோர் இல்லம், போன்ற முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.வெ.பாக்கியலெட்சுமி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் டி.ராஜ்குமார், சமூகநலத்துறை கண்காணிப்பாளர் பூரணச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.