இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில் எதிர்வரும் ( 28-10-2016 ) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். தமீமுன் அன்சாரி எம்எல்.ஏ கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளார். இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மஜக அதிராம்பட்டினம் கிளை சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
தமிழ் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றுகூடி ஒரே குரலில் நமது எதிர்ப்பை காட்டவேண்டும்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் வந்திடும்தாழ்வு
ReplyDelete