தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் நஜ்முதீன். அதிரை பேரூராட்சி 8 வது வார்டு அதிமுக கவுன்சிலர் வேட்பாளராக கட்சி தலைமை அண்மையில் இவரை அறிவித்தது.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்எல்ஏ வை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.அப்போது தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி உதவியில் சாலை வசதி, கழிவு நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தார். அருகில் அதிமுக அதிரை பேரூர் செயலர் பிச்சை உள்ளார்.
கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தது நிறைவேறிவிட்டது ??? இப்போ வேட்பாளரின் கோரிக்கை இதெல்லாம் தேர்தலின் " தந்திரம்" என்று தான் சொல்ல வேண்டும். போட்டியிடும் எல்லா வேட்பாளரும் பொய்வாக்குறுதிகளில் நான் " வார்டில் உள்ள குப்பைகளை அல்ல முயற்சி செய்வேன்" என்று சொல்லுகிறார்கள். வார்டில் குறைந்தது 5 வேட்பாளர் போட்டியிடுகிறார்கள் அவர்களின் குடும்பம் தன வீட்டை சுற்றி சுத்தமாக வைத்தாலே குப்பை குறைந்து விடும். தார்சாலை போடுவது இருக்கட்டும் முதலில் MLA வை மக்கள் சந்திக்க அவர் அதிரையில் ஒரு அலுவலகம் திறக்கட்டும். பிறகு மக்களே கோரிக்கை வைத்து விடுவார்கள்.
ReplyDeleteதேர்தல் ரத்துனு சொல்லி ஆப்பு வச்சிட்டாங்க மாப்பு.