அதிரை நியூஸ்:
துபாய், அக்-03
எதிர்வரும் 2017 ஜனவரி 26 ஆம் நாள் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின நிகழ்வுகளின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அமீரக ராணுவத்தின் துணை தலைமை தளபதியுமான ஷேக் முஹமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் 'இந்தியாவின் நண்பர் ஷேக் முஹமது' என வரவேற்று உறுதி செய்யப்பட்டுள்ள இத்தகவலை ஷேக் முஹமது அவர்கள் மனப்பூர்வமாக ஏற்று டுவீட் செய்துள்ளார்.
இந்தியாவின் பெருமைமிகு குடியரசு தின நிகழ்வில், இதற்கு முன் ஃபிரான்ஸ் அதிபர் பிரன்காயிஸ் ஹோலந்தே (2016), அமெரிக்க அதிபர் ஓபாமா (2015), ஜப்பானிய பிரதமர் ஷின்ஷோ அபே (2014), முன்னாள் ஃபிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி (2008), ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் (2007), முன்னாள் சவுதி பேரரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் சவுது (2006) போன்ற பிரபல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு ராஜியரீதியாக வருகையளித்த ஷேக் முஹமது அவர்களின் மும்பை பங்குச்சந்தை விஜயத்தை தொடர்ந்து சுமார் 1 பில்லியன் டாலர் அளவுக்கான வர்த்தக உறவுகளும், இந்தியாவில் அமீரகத்தின் முதலீடுகளும் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.