அதிரை நியூஸ், அக்-15
இந்தியாவில் குழந்தை கடத்தல்களும், சட்ட விரோத குழந்தை விற்பனைகளும் நாம் அடிக்கடி ஊடகங்களில் காணும் மனதை உலுக்கும் செய்திகள். முன்னேற்றமடைந்ததாக பீற்றிக் கொள்ளும் நாடுகளிலும் இத்தகைய கொடுஞ்செயல்கள் அரங்கேறுவதாக வரும் செய்திகள் உள்ளங்களை மேலும் பேரதிர்வு கொள்ளச் செய்கின்றன.
எருமையை நீருக்குள் வைத்துக்கொண்டு விலைபேசுவது போன்ற ஆன்லைன் வர்த்தகமெனும் பேராபத்தும் சகட்டுமேனிக்கு வளர்ந்து உலகெங்கும் தலைவிரித்தாடுகிறது. எதை விற்க வேண்டும் எதை நம்புவது என்ற நாணயமில்லாத, சந்தேக வியாபாரமிது.
ஜெர்மனியின் (மேற்கில்) அமைந்துள்ள டுயிஸ்பர்க் (Duisburg) எனும் நகரைச் சேர்ந்த ஒரு கொடூர பெற்றோர், ஆன்லைன் வர்த்தகத்தில் உலகளவில் முன்னனியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான ஈபே (eBay) எனும் தளத்தின் வழியாக தங்களின் 40 நாள் பெண் குழந்தையை 5000 யூரோக்களுக்கு விற்பதாக விளம்பரம் செய்ய, இது அவர்களின் உறவினர்கள் மூலம் காவல்துறைக்கு தெரியவர தற்போது கைது செய்யப்பட்டு 'ஆள் கடத்தல்' குற்றத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.