தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு அளிப்பது இன்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அதிரை பேரூராட்சி 17 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக அதிரை பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் M.M.S அப்துல் வஹாப் அவர்களின் மருமகள், M.M.S அன்வர் அவர்கள் மனைவி ரபீஸ் பானு ( வயது 38), M.M.S தாஜுதீன், M.M.S முஹம்மது யூசுப், M.M.S அப்துல் கரீம், M.M.S சேக் நசுருதீன், M.M.S நிஜார் அகமது, M.M.S ரபி அஹமது, M.M.S பஷீர் அஹமது, P.M.K தாஜுதீன், ஹபீப் முஹம்மது, அப்துல் ரெஜாக், V.T அஜ்மல்கான் உள்ளிட்ட தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெயசீலன் அவர்களிடம் இன்று பகல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பல ஆண்டுகள் அதிரை பேரூராட்சியை ஆண்ட பாரம்பரிய குடும்பம் இன்று சுயேச்சையாய் தேய்ந்து போகிவிட்டதே
ReplyDeleteஅதுவும் காங்கிரஸ் பேரியக்கத்தை வழி நடத்தியவர்கள் இன்று வாசனை நம்பி மக்களிடம் வாசனை இல்லாத நிலையை பின்னர் வந்த தலைமுறை ஏற்படுத்தி விட்டதே
காங்கிரஸ் இயக்கத்தில் கரைகண்ட சாதாரண மக்களின் மனநிலையை கணக்கில் எடுக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளால் தன்னைத்தானே அழித்துக்கொண்டது தான் வேதனைதான் மிச்சம்
எங்கே காங்கிரஸ்
அங்கே பி ஜெ பி
எங்கும் உதிரிகள் கட்சிகள்
அகோர காட்சிகள்
வாழுமா ஜனநாயகம் ?