.

Pages

Friday, January 31, 2020

அதிராம்பட்டினம் இக்ரா பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இக்ரா இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஸ்கூல் ~ மக்தப் பள்ளி மாணவர்கள் ஒரு நாள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா சென்று வந்தனர்.

சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அதிராம்பட்டினம் இக்ரா இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஸ்கூல் ~ மக்தப் பள்ளி மாணவ, மாணவிகள் 40 பேர் தஞ்சைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள பூங்கா, மியூசியம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களை கண்டு மகிழ்ந்தனர்.
 

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாறுவேடப்போட்டி!

அதிராம்பட்டினம், ஜன.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 22-வது ஆண்டு மாறுவேடப்போட்டி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியை பள்ளிச்செயலர் யு. மகாலட்சுமி தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, தேசியத்தலைவர்கள், விவசாயி, கவிஞர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர், மருத்துவர், காவலர், கிருஷ்ணன், சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட வேடமணிந்து அவர்கள் போல் பேசி போட்டியில் பங்கேற்றனர். போட்டி நடுவர்களாக பள்ளி ஆசிரியைகள் தயாநிதி, உஷா ஆகியோர் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் என்.உதயகுமார் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியினை, பள்ளி ஆசிரியர்கள் சுதாகர், சங்கர் ஆகியோர் தொகுத்தளித்தனர். நிறைவில், பள்ளி ஆசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.
 

Thursday, January 30, 2020

CAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரமாண்ட பெண்கள் மாநாடு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.30
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக பெண்கள் மாநாடு அதிராம்பட்டினம் ஜாவியா அருகில் இன்று (30-01-2020) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மாநாட்டிற்கு, எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என். முகமது புஹாரி தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மவ்லவி. ஹாபிழ் எம்.ஏ ஷவ்கத் அலி உஸ்மானி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில செயலாளர் எம்.தஸ்லீமா, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலச் செயலாளர் என். சஃபியா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

மாநாட்டில், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெற வேண்டும், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி நடத்தப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எவ்வித தகவல் மற்றும் ஆவணங்களை அளிக்காமல் ஒத்துழையாமையை கடைபிடிப்பது எனவும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக போராடி வரும் பெண்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறையை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தி ஜனநாயக விழுமியங்களை தகர்த்தெறிந்து வரும் மத்திய, மாநில அரசுகளை வன்மையாகக் கண்டிப்பது, அறவழியில் போராடுபவர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், வெகுஜன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஏனைய மாநிலங்களில் தடை செய்ததைப் போல், தமிழகத்திலும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். அகமது அஸ்லம் வரவேற்றுப் பேசினார். வழக்குரைஞர் இசட். முகமது தம்பி நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். நிறைவில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் என்.எம்.எஸ் ஷாஃபிர் அகமது நன்றி கூறினார்.

மாநாட்டின் இடையே, சி.எப்.ஐ அமைப்பின் விதைகள் கலைக்குழுவினர் மற்றும் மாநாட்டில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் தங்கள் செல்லிடப்பேசியில் விளக்கை எரியவிட்டு முழக்கமிட்டனர்.




CAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரமாண்ட மனித சங்கிலி போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.30
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக  மனிதசங்கிலி போராட்டம் நடத்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

அதன்படி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் கிழக்கு கடற்கரைச்சாலை தொடங்கி மல்லிபட்டினம் செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலையில் இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடந்த பிரமாண்ட மனித சங்கிலி போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டு, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.