.

Pages

Monday, January 13, 2020

பழுதடைந்த பம்பிங் மோட்டாரை சீர் செய்து நீர் மட்டம் குறைந்திருக்கும் குளங்களுக்கு நீர் நிரப்பக் கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஜன.13
அதிராம்பட்டினம் அருகே உள்ள நசுவுனி ஆற்று ஓடையிலிருந்து வெளியேறும் உபரிநீரை பம்பிங் மூலம் இறைத்து, வறண்ட குளங்களுக்கு தடையின்றி நீர் நிரப்புவதற்காக அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. இதன் மூலம், ஆலடிக் குளம், செக்கடி குளம், மன்னப்பங்குளம், கருசமணி, புள்ளைகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீர் இறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பம்பிங் மோட்டாரில் ஏற்பட்ட பழுதால் நீர் இறைப்பதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், பழுதடைந்து பம்பிங் மோட்டாரை உடனடியாக சீர்செய்து, நீர் மட்டம் குறைந்து காணப்படும் குளங்களுக்கு உடனடியாக நீர் நிரப்ப வேண்டுமென அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷை இன்று திங்கட்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது சமூக ஆர்வலர் அப்துல் ஜப்பார் உடனிருந்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.