.

Pages

Thursday, January 2, 2020

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

அதிராம்பட்டினம், ஜன.01
அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ~ சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இன்று (ஜன.01) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதிரை பைத்துல்மால் அமைப்பின் செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் பற்றி சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர் எம்.ஏ அப்துல் காதர் எடுத்துரைத்தார். பின்னர், கூட்டத்தை வழிநடத்தினார்.

இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், தமுமுக, எஸ்.டி.பி.ஐ, மமக, மஜக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

இக்கூட்டத்தில், அனைத்துக் கட்சிகள், மாணவா் அமைப்புகள், சமுதாயக் கூட்டமைப்புகள் ஆகியவற்றின் சாா்பில், நாளை (ஜன.3) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அனைத்து ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்பது எனவும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், சமுதாய கூட்டமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. நிறைவில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.