தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்துதரவும், 110/11 KVA துணை மின் நிலையப் பணியை தொடங்கவும், அதிராம்பட்டினத்தை புதிய சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கவும், அதிராம்பட்டினத்தில் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை செயல்படுத்தவும், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவை, அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம், அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிக்கவும், அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்புச் சாலை சீரமைக்கவும், அதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி, சென்னை, மதுரைக்கு அரசுப் பேருந்து இயக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை அதிரை மேம்பாட்டுச் சங்கமம் அமைப்பின் செயலாளர் ஏ.எல் அஸ்ரப் அலி சந்தித்து மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் அந்தந்த துறைகளுக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினாராம். அப்போது, அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு பன்னாட்டு தொழில் அதிபர் அப்துல் மஜீது பதுருதீன் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதிரை மேம்பாட்டுச் சங்கமம் அமைப்பின் செயலாளர் ஏ.எல் அஸ்ரப் அலி அளித்த மனுவில் கூறியிருப்பது;
ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் இந்த பகுதியில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு மற்றும் உற்பத்தி செய்யப்படும் கருவாடு, உப்பு போன்ற கடல் சார்ந்த பொருட்கள் அதிகளவில் இங்கு இருந்த துறைமுகத்திலிருந்து கப்பல் மூலமும், ரயில், லாரி மூலமும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வந்தது. காலப்போக்கில் துறைமுகம் மூடப்பட்டதால் இப்பகுதியில் நடந்து வந்த வர்த்தகம் வெகுவாக குறைந்தன.
மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும். மீன்களை ஏற்றுமதி செய்ய வழி செய்யும் வகையிலும், அரசுக்கான வருவாய் கணிசமான அளவில் பெருகும் என்பதாலும். துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் வேலை வாய்ப்பு ஏற்படவும், அதிராம்பட்டினம் துறைமுகம் இருந்த அதே பகுதியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
இதனால், மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரணங்களை இலகுவாக ஏற்றுவதற்கும், பிடித்து வரப்பட்ட மீன்களை இலகுவாக கையாள்வதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும் வழி வகை ஏற்படும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிரை மேம்பாட்டுச் சங்கமம் அமைப்பின் செயலாளர் ஏ.எல் அஸ்ரப் அலி அளித்த மனுவில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஆறுமுகக் கிட்டங்கித் தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வாழும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் இந்த பகுதியில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு மற்றும் உற்பத்தி செய்யப்படும் கருவாடு, உப்பு போன்ற கடல் சார்ந்த பொருட்கள் அதிகளவில் இங்கு இருந்த துறைமுகத்திலிருந்து கப்பல் மூலமும், ரயில், லாரி மூலமும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வந்தது. காலப்போக்கில் துறைமுகம் மூடப்பட்டதால் இப்பகுதியில் நடந்து வந்த வர்த்தகம் வெகுவாக குறைந்தன.
மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும். மீன்களை ஏற்றுமதி செய்ய வழி செய்யும் வகையிலும், அரசுக்கான வருவாய் கணிசமான அளவில் பெருகும் என்பதாலும். துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் வேலை வாய்ப்பு ஏற்படவும், அதிராம்பட்டினம் துறைமுகம் இருந்த அதே பகுதியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
இதனால், மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரணங்களை இலகுவாக ஏற்றுவதற்கும், பிடித்து வரப்பட்ட மீன்களை இலகுவாக கையாள்வதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும் வழி வகை ஏற்படும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.