அதிராம்பட்டினம், ஜன.01
மத்திய அரசின் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டத்தை தமிழக மண்ணில் அமல்படுத்த ஒரு காலத்திலும் அனுமதிக்க மாட்டோம். மீறி அமல்படுத்தினால், அதை எதிர்த்து அடுத்தகட்டமாக ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவோம் என்றார் எம். தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
அதிராம்பட்டினத்தில் இன்று (ஜன.01) புதன்கிழமை காலை நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலப் பொதுச்செயலாளருமாகிய எம். தமீமுன் அன்சாரி கலந்துகொண்டு ஆற்றிய உரையில்;
'இந்தியாவில் இத்துணை ஆண்டுகாலம் மண்ணின் புதல்வராக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், என்.ஆர்.சி சட்டத்தின் மூலமாக நம்முடைய வாழ்வாதாரம் பறிக்கப்படுமோ, நமது குடியுரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நாடெங்கிலும் மக்கள் ஒரு அரசரிந்த போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இங்கு ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லீம்களுக்காக போராடுகிறார்கள் என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. பலர் இவை முஸ்லீம்கள் நடத்தக்கூடிய போராட்டமாகவே சித்தரித்துக்கொண்டு இருக்கின்றனர். தயவுசெய்து அந்த மனநிலையில் இருந்து மாறிவிடுங்கள். இந்தியாவில் வாழக்கூடிய சிறுபான்மையினரை காக்க, பெரும்பான்மை இந்து சமுதாயம் நடத்திவரும் ஒத்துழையாமை இயக்க போராட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த போராட்டத்தில், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் களத்திற்கு வந்ததுபோல, பனராஸ் இந்து பல்கலைகழக மாணவர்கள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள். இந்த போராட்டம் என்பது அரசியல் சாசனம் சட்டத்தின் பி.மு 14, பி.மு 15, பி.மு 20 உள்ளிட்டவைகளை பாதுகாப்பதற்காக நடத்தக்கூடிய போராட்டம் என்பதை மறந்துவிடக்கூடாது.
குடியுரிமை என்று ஒன்று இருந்தால்தானே நாம் திருமணம் நடத்த முடியும், வியாபாரம் செய்ய முடியும், கல்வி கற்க முடியும், அரசியல் செய்ய முடியும்.
குடியுரிமையற்று அகதிகளாக இருந்தால் இதுபோன்றவைகளை செய்ய இயலுமா?
இந்த போராட்டம் பெட்ரோல் டீசல், விலைவாசி உயர்வுக்கான போராட்டமல்ல. இது குடியுரிமைக்கான போராட்டம், வாழ்வுரிமைக்கான போராட்டம். எனவேதான், இந்த சட்டத்தை தமிழக மண்ணில் அமல்படுத்த ஒரு காலத்திலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீறி அமல்படுத்தினால், அதை எதிர்த்து அடுத்தகட்டமாக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம், சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவோம்' என்றார்.
இதையடுத்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தொழிற்சங்கப்பிரிவை புதிதாக தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு கட்சி கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் எம்.தாஜுதீன், ஊடகப் பிரிவு மாநிலப் பொருளாளர் ஹமீது ஜாஃபர், மாவட்ட செயலாளர் அப்துல் சலாம், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, அதிரை சரபுதீன், அதிரை அப்துல் சமது, அரபாத், ஹக், ஹாஜி, செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.