இயற்கை விவசாயம், மரங்கள் வளர்ப்பு பற்றி விவசாயிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மூலிகைத் தோட்ட வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிரை FM ~ 90.4 நிறுவனர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக 'மண்புழு விஞ்ஞானி' பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் கலந்துகொண்டு விவசாயிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் எழுப்பிய இயற்கை விவசாயம், மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். மேலும், இயற்கை விவசாயம் பற்றி வேளாண்துறை அதிகாரி (ஓய்வு) யு. வேலுச்சாமி கலந்துகொண்டு விளக்கிப்பேசினார்.
இக்கூட்டத்தில், ஹாஜி எம்.எஸ் சைஃபுதீன், எம்.எஸ் முகமது ஆஜம், ஏ.அப்துல் ரெஜாக், மு.செ.மு ராஃபியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவில், இப்ராஹிம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிரை சமூக பண்பலை வானொலி செய்திருந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.