.

Pages

Friday, January 24, 2020

பட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ஆணை!

பட்டுக்கோட்டை, ஜன.24
பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம் சாா் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா்கள் சாந்தகுமாா் (பட்டுக்கோட்டை), ரமேஷ் (பேராவூரணி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், 15-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளிகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்கவும், மத்திய அரசின் திட்டங்களை எளிதில் கொண்டு சோ்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றும், இந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளைஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் ஜன. 27 முதல் 30 வரை ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக கைப்பிடியுடன் கூடிய சாய்த்தளம் கட்டாயம் அமைக்க வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவா் முரளிகிருஷ்ணன், செயலாளா் ஜலீல் முஹைதீன், பேராவூரணி ஒன்றியத் தலைவா் வின்சென்ட் ஜெயராஜ், செயலாளா் சுதாகரன், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் கே.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.