பட்டுக்கோட்டை, ஜன.21
டெண்டர் கோரப்பட்ட பிலால் நகர் தார்சாலைப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வலியுறுத்தி ஜமாஅத் நிர்வாகத்தினர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இ.ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை கோரிக்கை மனு அளித்தனர்.
பிலால் நகர் ஜமாத்தார்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டு தோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிக்கும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாவர். மேலும், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவர்.
இதுதொடர்பாக இப்பகுதி ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில், இப்பகுதியையொட்டி அமைந்துள்ள செடியன் குளம் தென்கரை முதல் ஈஸ்ட்கோஸ்ட் சாலை வரை புதிதாக மழைநீர் கழிவு நீர் வடிகால் வசதி, பழுதடைந்த சாலைகளை சீரமைத்து புதிதாக தார்சாலை வசதி, பிலால் நகர் இணைப்பில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் சாலையை, இப்பகுதி பொதுமக்கள் கடந்துசெல்ல புதிதாக நடைபாலம் ஆகியவற்றை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில், SCPAR திட்டத்தின் கீழ், பிலால் நகரில், ரூ.8.87 லட்சத்தில், 350 மீட்டர் நீளத்தில் தார்சாலையும், அதே பகுதியில் ரூ.8.24 லட்சத்தில், 325 மீட்டர் நீளத்தில் மற்றொரு தார்சாலை அமைப்பதற்கு டெண்டர் கோரப்பபட்டதாகவும், மேலும், மழை காலங்களில் வெள்ளத்தில் மிதக்கும் பிலால் நகரில் ரூ.26 லட்சத்தில், வடிகால் அமைப்பதற்கு திட்ட வரைவு தயாரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, இப்பணிகளை எவ்வித தாமதமின்றி உடனடியாக தொடங்குவதற்கு
உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில், பிலால் நகர் ஜமாஅத் நிர்வாகம் சார்பில், பள்ளி முத்தவல்லி ஹாஜி எம்.எம்.ஏ அகமது கபீர், பிலால் நகர் ஜமாஅத் தலைவர் எஸ்.முகமது முகைதீன், பொருளாளர் எம்.நிஜாமுதீன், சமூக ஆர்வலர் அதிரை அமீன், பிலால் நகர் கவுன்சிலர் எம்.ஆர் கமாலுதீன், இஜாஸ் அகமது, முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.