நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : N. அபூபக்கர் (பொருளாளர் )
முன்னிலை : S. சரபுதீன் (தலைவர் )
வரவேற்புரை : P. இமாம்கான் (கொள்கை பரப்பு செயலாளர் ) : சிறப்புரை: A.M அஹமது ஜலீல் (செயலாளர் )
நன்றியுரை : A. சாதிக் அகமது (இணைத்தலைவர்)
தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் நிர்வாகத்தில் என்னென்ன செயல்பாடுகள் மற்றும் தொடர் சேவைகள் அல்லாஹ்விற்காக செய்து வருகிறார்கள் என்பதை விரிவாகவும, நமதூர் வாசிகள் கேட்ட கேள்விகளுக்கும் நிதானமாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது. 74-வது கூட்டம் சிறப்பு கூட்டமாக அமைந்தது, இதில் பல்வேறு கோணங்களில் பல்வேறு தரப்பு கேள்விகளுக்கு அவர்கள் நிறைவு அடையும் படி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
2) பென்ஷன்தாரர்களுக்கு பென்ஷன் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்பதை விளக்கப்பட்டது. பென்சன் தாரர்களுக்கு உதவ ரியாத் மாநகரில் புதிதாக சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுத்ததின் விளைவாக இதுவரை -26 நபர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்த அனைவருக்கும் அல்லாஹ் மேலும் இரண- பரக்கத்தை மேலும் அபிவிருத்தி செய்ய துஆ செய்யப்பட்டது. மேலும், பென்ஷன் சம்பந்தமான விளக்கங்கள் தலைமையகத்தில் இருந்து வந்த கடிதத்தை P. இமாம்கான் அவர்களால் வாசிக்கப்பட்டு அதற்குரிய பதில்களையும் விளக்கங்களையும் விரிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும்படி எடுத்து சொல்லப்பட்டது.
3) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை செயல்பாடுகள் இன்னும் சிறந்து விளங்கிடவும், வலிமையோடும், மேலும் திறமையாக செயல்பட கூடுதலாக புதிதாக 3- பொறுப்புகளை, கீழ்காணும் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டது.
01.நிஜாமுதீன் - ஆலோசகர் ( புதிய பொறுப்பு )
02. ஜம்சித் அஹமது - இணை பொறுளாளர் ( காலி இடம் பூத்தி செய்யப்பட்டது )
03. நெய்னா முஹம்மது – ஒருங்கிணைப்பாளர் ( புதிய பொறுப்பு )
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மென்மேலும் சிறந்து விளங்கிட பாடுபடுவோம் என்று அல்லாஹ்வுக்காக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
4) சமீபத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அணைத்து தெருவாசிகள் சேர்ந்து ஊர், மற்றும் சமுதாய நலம் கருதி சம்பந்தமாக கூட்டம் நடத்தியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு முழு வெற்றியடைய துவா செய்யப்பட்டது
5) அதிரையில் சமீபத்தில் வபாத்தான: மர்ஹும். ஹாஜா முகைதீன் (அமா டிராவல்ஸ்), மர்ஹும்.-மஜ்பா ஹாஜி எம்.ஏ அஸ்ரப் அலி. மற்றும் மர்ஹும். S.A.K கமாலுத்தீன் அவர்களுக்காக துவா செய்யப்பட்டு ஆழ்ந்த இரங்கள் தெரிவிக்கப்பட்டது.
6) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு FEBRUARY 2020 14-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் மஃரிப் தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
சேவைகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !(அபுல் ஹைர் . சரபுதீன் , நிஜாம் இவர்களின் உறவுக்காரர் )
ReplyDelete