.

Pages

Sunday, January 26, 2020

குடியரசு தின விழாவில் ரூ.67.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி: ஆட்சியர் வழங்கினார் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.01.2020) நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து  73 பயனாளிகளுக்கு ரூபாய் 67 இலட்சத்து 36 ஆயிரத்து 739 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தஞ்சாவூர் ஆயுத படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, வெண்புறா மற்றும் மூவர்ண பலூனினை மாவட்ட ஆட்சித் தலைவர் வானில் பறக்க விட்டு, காவல் துறையின் அணி வகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது  வாரிசுதாரர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  கௌரவித்தார்.

பின்னர், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பிலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.38,300 மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.13,137 மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.4,50,000 மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.3,77,300 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.42,728 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.15,43,303 மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.9,520 மதிப்பிலும்,  கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.2,700 மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.13,50,000 மதிப்பிலும்,  மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.8,00,000 மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.2,70,085 மதிப்பிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.2,10,000 மதிப்பிலும், தாட்கோ நிறுவனத்தின் சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.15,78,666 மதிப்பிலும்  என மொத்தம் 73 பயனாளிகளுக்கு ரூ. 67 இலட்சத்து 36 ஆயிரத்து 739 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 136 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

இறுதியாக, பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் ஒரத்தநாடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பசுபதிகோயில் தூய கபிரியேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை உள்ளுர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  தஞ்சாவ10ர் கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்  குழந்தைகள் நல குழு மாணவர் இல்லம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்;த சுமார் 342 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், தஞ்சாவூர் காவல்துறை துணைத் தலைவர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கதிரேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி (தஞ்சாவூர்),மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருட்டிணன், அனைத்துத் துறை முதன்மை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.