திருவாரூர் ~ காரைக்குடி ரயில் மார்க்கம் பாரம்பரியமிக்க தொன்மை வாய்ந்தது. மீட்டர்கேஜ் காலத்தில் மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி வரை பலதரப்பட்ட பயணிகளும் குறிப்பாக வணிகர்கள், அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரி மாணவர்கள், போன்றோர் அதிகம் பயன்படுத்தினர். அகலப்பாதை பணி களுக்காக 2006 ஆம் ஆண்டு சேவை நிறுத்தப்பட்டது. பல கட்ட போராட்டத்திற்கு பிறகு 2019 ஜூன் மாதம் முதல் தினமும் ஒரு டெமு ரயில் இயங்குகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய ஊர்களில் உள்ள இரயில் ஆர்வலர்கள் அகலப்பாதை கூட்டமைப்புத் ஒன்றினை துவங்கி அதன் வழியாக திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் அதிகமான சேவைகளை துவக்க வேண்டும்; சரக்கு போக்குவரத்து சேவைகளை துவக்க வேண்டும் என பலகட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இரயில் இயக்கப்படாமைக்கு முக்கிய காரணம் தென்னக இரயில்வே இந்த தடத்தில் உள்ள இரயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை போதுமான அளவிற்கு நியமிக்காமைதான்.
இந்நிலையில் இன்று 17-1-2020 திருவாரூரில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் அவர்களை திருவாரூர்- காரைக்குடி அகல இரயில் பாதை உபயோகிப்போர் சங்க கூட்டமைப்பினர் அதன் தலைவர் என்.ஜெயராமன், செயலர் வ.விவேகானந்தம் திருவாரூர் தணிகாசலம், பேராசிரியர் ப. பாஸ்கரன், பாரதி, அக்பர் பாஷா, இலியாஸ் முத்துப்பேட்டை சாஜத், சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) அதிராம்பட்டினம் ஏ.அப்துல்ரசாக், எஸ்.ஏ.அப்துல் ஜலில், நஜ்மூதீன், ஜித்தா.ரஃபியா, பட்டுக்கோட்டை எம்.கலியபெருமாள் கா.லட்சுமிகாந்தன் ஆகியோர் சந்தித்து இந்த மார்க்கத்தில் விரைவு ரயில் சேவை துவங்க உதவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நாகை எம்பி திரு.எம்.செல்வராஜ் கூறுகையில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ராமநாதபுரம் எம்பி, திரு. நவாஸ் கனி, சிவகங்கை எம்பி திரு. கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து சென்று தென்னக இரயில்வே அதிகாரிகளை வரும் 28- 01- 2020 அன்று சந்தித்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளாரஏறக்குறைய ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து சரக்கு ரயில்களும் பயணிகள் இரயில்களும் இயக்கப்படாமல் உள்ளது வேதனை அளிப்பதாக இருக்கிறது என்றார்.
திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்கத்தலைவர் தணிகாசலம், "தென்னக ரயில்வே இது விஷயத்தில் பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணாக்கர்கள், நலனை பிரதானமாக கருதி உடனடியாக சேவை துவங்க வேண்டும். அப்படி சேவை துவங்கவில்லை எனில் இப்பகுதி மக்கள் கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள தயாராக உள்ளனர் "என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.