.

Pages

Wednesday, January 1, 2020

ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் வேட்பாளர் அதிரை அமீன் நன்றி அறிவிப்பு!

இறைவனின் திருப்பெயரால்...

அல்ஹம்துலில்லாஹ். திருப்தியான முறையில் ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத்திற்கான தேர்தல் நேற்றைய முந்தினம் நிறைவடைந்துவிட்டது, இதன் முடிவுகள் எதிர்வரும் 02.01.2020 அன்று வெளியாக உள்ளன இன்ஷா அல்லாஹ்.

இந்த தேர்தலின் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் "ஒரு முஃமீனுக்கு வெற்றியிலும் நன்மை இருக்கின்றது, தோல்வியிலும் நன்மை இருக்கின்றது" என இஸ்லாமிய நன்னம்பிக்கையோடு பொருந்திக் கொள்வேன் இன்ஷா அல்லாஹ்.

இத்தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்....  எனக்கு தார்மீக நல்லாதரவு வழங்கிய பிலால் நகர், எம்.எஸ்.எம். நகர் ஜமாத் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், சிறார்கள் என அனைத்து தரப்பிற்கும்...

பகிரங்க ஆதரவு நல்கி களம்கண்ட மனிதநேய ஜனநாயக கட்சி. நாம் தமிழர் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியோருக்கும்...

கை உருளை சின்னத்தையும் என்னையும் ஏரிப்புறக்கரை முழுவதுமுள்ள வீடுகளுக்குள் கொண்டு சேர்த்த பெண்கள் அணியினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், சமூக தளங்களில் வாழ்த்திய, பரப்பிய நெஞ்சங்களுக்கும்...

வெளியூர், வெளிநாடுகளில் இருந்தாலும் தங்களின் வீட்டினருக்கும் எடுத்துக்கூறி எனக்கு ஆதரவாக வாக்களிக்க நல்ல ஆலோசனைகளை வழங்கிய சகோதரர்கள், விளம்பரதாரர்கள். அச்சகத்தினர், ஒலி ஒளி அமைப்பாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், போஸ்டர் நோட்டீஸ் வினியோகித்தவர்கள், ஒட்டியவர்கள்...

நேரடியாக எனக்கு எத்தகைய சம்பந்தமில்லாத நிலையிலும் என்னை குறித்து விசாரித்து அறிந்ததன் மூலம் தங்களுடைய உறவினருக்கு பாடுபடுவது போல் தனிப்பட்ட பிரதிபலன்கள் எதையும் எதிர்பாராது உழைத்த பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் மற்றும் ஏரிப்புறக்கரை உட்கிராம பெண்களுக்கும்...

சராசரி அரசியல்வாதிகளின் தேர்தல் நடைமுறைகளான உள்குத்து அரசியல், கள்ள ஓட்டு, ஓட்டுக்கு காசு, பொய்யான வாக்குறுதிகள், பகுதியில் முக்கிய ஆட்களை விலைக்கு வாங்குதல் போன்ற எத்தகைய முறைகேட்டிலும் ஈடுபடாமல் சுத்தமான, வித்தியாசமான வேட்பாளராக என்னை மக்களுக்கு அடையாளம் காட்ட உதவிய போட்டி வேட்பாளர்களுக்கும்...

பத்திரிக்கையாளரும் பிலால் நகர் ஜமாத் பொருளாளருமான தம்பி சேக்கனா நிஜாமுதீன், போர்முனை தளபதிகள் போல் சுழன்ற தம்பிகள் முஹமது, நிஜாஸ் அகமது ஆகியோருக்கும் இன்னும் எனது கவனக்குறைவால் விடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

இவண்,
அதிரை அமீன் (எ) முஹமது அமீன்
ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.