அதிரை நியூஸ்: டிச.31
அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் சாலிம் சேகுனா ஆலிம் இவரது மகன் அல் ஹாபிஸ் காரி எஸ்.அஹ்மத் ஜாபிர் (வயது 24). ஆலிம் மற்றும் பி.காம் பட்டதாரி மாணவர். இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குர்ஆன் ஓதும் கிராத் போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை வாரிக் குவித்து வருகிறார்.
இந்தநிலையில், சென்னை இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புஹாரி ஆலிம் அரபிக்கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான குர்ஆன் ஓதும் கிராத் போட்டி இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வடக்குத்தெரு பள்ளியில் சனிக்கிழமை (டிச.28) இரவு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹாஃபிழ் மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் என மொத்தம் 45 பேர் கலந்துகொண்டனர். இதில், குர்ஆன் ஓதும் கிராத் போட்டியில் அதிராம்பட்டினம் ஆலிம் மாணவர் எஸ்.அஹ்மத் ஜாபிர் முதலிடம் பிடித்து முதல் பரிசினை வென்றார்.
பிழையின்றி ஓதியது, மொழி உச்சரிப்பு, இனிமையான குரல்வளம் ஆகியன முதல் பரிசு தேர்விற்கு காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அல்ஹாஜ் அஸ்ரப் புஹாரி தலைமையில் நடந்த பரிசளிப்பு விழாவில், போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.