தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பிறகு 17,444 மனுக்கள் செல்லத்தக்கவையாக ஏற்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக டிச. 27, 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகள், 276 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள், 589 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள், 4,569 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 5,462 பதவிகள் உள்ளன. இவற்றுக்கான வேட்பு மனு தாக்கல் டிச. 9-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 210 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 1,923 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 3,494 பேரும், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11,979 பேரும் என மொத்தம் 17,606 போ் தாக்கல் செய்துள்ளனா்.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 162 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து, மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 206 மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,887 மனுக்களும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 3,462 மனுக்களும், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 11,889 மனுக்களும் என மொத்தம் 17,444 மனுக்கள் செல்லத்தக்கவையாக ஏற்கப்பட்டன.
மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை வரை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.