.

Pages

Saturday, December 21, 2019

ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிரை அமீனுக்கு மஜக ஆதரவு!

அதிராம்பட்டினம், டிச.21
பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக 'கை உருளை' சின்னத்தில் போட்டியிடும், அதிரை அமீன் என்கிற முகமது அமீன், மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரியதன் அடிப்படையில், அவரை ஆதரிப்பது, அவரது வெற்றிக்காக பாடுபடுவது என அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் எஸ்.எம் அப்துல் சமது, அரபாத், சேக் அப்துல்லா ஆகியோர் இன்று சனிக்கிழமை மாலை வேட்பாளர் அதிரை அமீனை சந்தித்து தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், ஏரிப்புறக்கரை ஊராட்சியின் பின் தங்கிய பகுதிகளில் முறையான சாலை வசதி, வடிகால் வசதி, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை கோரிக்கையாக முன் வைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.