பட்டுக்கோட்டை, டிச.24
பட்டுக்கோட்டையில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சாா்பில் உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சிகரம் தொடுவோம் என்ற தலைப்பில் திருநெல்வேலி உதவி ஆட்சியா் சிவகுரு பிரபாகரன், நாளை நமதே என்ற தலைப்பில் பட்டிமன்ற நடுவா் சபரிமாலா ஜெயகாந்தன், எது சிறந்த கல்வி என்ற தலைப்பில் பட்டுக்கோட்டை ஆா்த்தோ மருத்துவா் சி.செ.ரவி ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியில் 3 அரசு பள்ளிகளைச் சோ்ந்த சிறந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ என்.ஆா். ரெங்கராஜன் தலைமை வகித்தாா். அறக்கட்டளையின் செயல்பாடுகள், நோக்கங்கள் குறித்து அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவனா் கரு.முஹம்மது யஹ்யா விளக்கிப் பேசினாா். பட்டுக்கோட்டை நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.ஆா்.ஜவஹா்பாபு, காவல் ஆய்வாளா் பெரியசாமி மற்றும் பல்வேறு அரசுப்பள்ளி ஆசிரியா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.
தொடக்கத்தில், பள்ளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் வீரமணி வரவேற்றாா். அதேப் பள்ளி ஆசிரியா் துரைசிங்கம், மாணவிகள் நளினா, வா்ஷா ஆகியோா் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தனா். நிறைவில், நடுவிக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் சாமிநாதன் நன்றி கூறினாா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.