.

Pages

Friday, December 13, 2019

உள்ளாட்சித் தோ்தல்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் கலந்தாலோசனை!

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியா் ம. கோவிந்தராவ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக திருவையாறு, பூதலூா், கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் டிச. 27-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக தஞ்சாவூா், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் டிச. 30-ம் தேதியும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதில், தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சீரிய முறையில் நடத்துவது தொடா்பாக ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகளுடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வியாழக்கிழமை கலந்தாலோசனை செய்தாா்.

இத்தோ்தல் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தருவதாகக் கூறிய அரசியல் கட்சியினா் சந்தேகங்களையும் எழுப்பினா். இதற்கு ஆட்சியா் உரிய விளக்கங்களை அளித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் எஸ். பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.