.

Pages

Friday, December 13, 2019

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

அதிராம்பட்டினம், டிச.13
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி, சுருக்கு மடி, ரேஸ் மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாக் ஜலசந்தி நாட்டுப்படகு மீனவர் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.ஏ நாகராஜன் தலைமையில், சங்க நிர்வாகிகள் சத்திய மூர்த்தி, முத்துக்குமரன், தேவேந்திரன், ரெத்தினவேலு உட்பட 20 க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை சந்தித்து வலியுறுத்தினர்.

கோரிக்கையில் கூறியிருப்பது;
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் காரைக்கால், நாகை, சேதுபாவாசத்திரம், கோட்டைபட்டினம் போன்ற வெளியூர் மீனவர்கள் ரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி, சுருக்கு மடி, ரேஸ் மடி போன்ற வலைகளைப் பயன்படுத்தி பெரிய மீன்கள் முதல் குஞ்சு மீன்கள் வரை அரித்து மீன்வளத்தை அழித்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.