.

Pages

Monday, December 16, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் உத்தம திரு நபியின் உதய தினவிழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக, திருநெல்வேலி ரியாலுல் ஜின்னான் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி, அல்ஹாபிழ் எம்.ஒய் ஹுமாயூன் கபீர் கலந்துகொண்டு மீலாது விழா சிறப்புரை ஆற்றினார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி கல்லூரியில் 'அண்ணலாரின் அற்புதங்கள், மாநபியின் மருத்துவங்கள், நாயகத்தின் நற்குணங்கள்' ஆகிய தலைப்புகளில் நடந்த பேச்சுப்போட்டி, 'இஸ்லாமும் அறிவியலும்', அண்ணலார் மீது ஸலவாத் ஓதுவோம், 'அண்ணலார் அகிலத்துக்கு முன்மாதிரி' ஆகிய தலைப்புகளில் நடந்த கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி வினா, கிராத் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகள் அனைத்தையும், கல்லூரி தமிழ்துறைத் தலைவர் அ. கலீல் ரஹ்மான் தொகுத்தளித்தார். கல்லூரி அரபித்துறை பேராசிரியர் எம்.சேக் நசுருதீன் நன்றி கூறினார். இதில், கல்லூரி அரபித்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ.முகமது ஹாலித், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.