.

Pages

Monday, December 9, 2019

அதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் தின விழிப்புணர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.09
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்து பேசியது;
'கைகளில் ஒட்டும் நோய்க் கிருமிகளே, மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு தொற்று நோய்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் 50 பேருக்கு, மருத்துவமனை (யுனானிப் பிரிவு) மருத்துவர் சி.ஷெரீன், மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் ஜெயபாரதி, செவிலியர் சமீமா ஆகியோர் பங்கேற்று கை கழுவுதல் பற்றி செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர். முன்னதாக, அனைவரும் 'சுத்தம்' பற்றிய உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பட்டினை, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி எம்.அமீர் காசிம் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.