.

Pages

Thursday, December 5, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் ரத்த தான முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.05
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், கல்லூரி எக்ஸ்னோரா அமைப்பு, எச்டிஎப்சி வங்கி, தஞ்சை காளி ரத்த வங்கி ஆகியவை சார்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வா் ஏ. முகமது முகைதீன் முன்னிலை வகித்தாா்.

தஞ்சாவூர் காளி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சண்முக சுந்தரம் தலைமையிலான குழுவினா் மாணவா்களிடமிருந்து ரத்தம் தானமாக பெற்றனா். முகாமில் மொத்தம் 75 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. ரத்த தானம் அளித்த மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் வாகை, புங்கை, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முகாமில், எச்டிஎப்சி வங்கி பட்டுக்கோட்டை கிளை மேலாளர் டி.திருமுருகன், கல்லூரி பேராசிரியர்கள் டி.லெனின், கே.செய்யது அகமது கபீர், பேராசிரியை சுமதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் ஜெ.முகமது அலி, ஏ.அப்ரூஸ் பானு, ஜி.ஆர் ஞானராஜா, ஜெ.சாஜித் இக்பால், எச்டிஎப்சி வங்கி பட்டுக்கோட்டை கிளை உதவி மேலாளர்கள் ஜி.விவேகானந்தன், பேட்ரிக் ஜான் பால் மற்றும் வங்கி அலுவலர்கள் ரகுராமன், பாண்டிஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.