.

Pages

Monday, December 2, 2019

'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தில் பிரிலியண்ட் CBSE பள்ளி மாணவர்கள் பயிற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.02
அமெரிக்கா கல்விச் சுற்றுல்லா சென்றுள்ள பிரிலியண்ட் CBSE பள்ளி மாணவர்கள் "நாசா" விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 18 பேர் பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமையில், 3-வது ஆண்டாக அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு 7 நாட்கள் கல்விச் சுற்றுலா, கடந்த நவ.4 ந் தேதி, அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்குள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்வெளி வீரர்களின் பயண பயிற்சி மற்றும் ராக்கெட் ஏவுதல் (சிமிலேட்டர்) பயிற்சி வழங்கப்பட்டது. இதில், விண்வெளி சோதனைகள், விண்வெளி வீரராவதற்கு அளிக்கப்படும் பயிற்சி, செயற்கைகோளை கட்டுப்படுத்தி இயக்குவது எப்படி? அது எப்படி இயக்கப்படுகிறது, ரோபோ தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், நிலவுக்கு சென்று வந்துள்ள அப்போலோ மற்றும் சடர்ன் வி ராக்கெட் ஆகியவற்றை நேரடியாக கண்டுகளித்தனர். விண்வெளி வீரர்களோடு கலந்துரையாடல், ராக்கெட் மாதிரி செய்து பறக்கவிடும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்றனர்.

மேலும், பள்ளி மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. மாணவர்களின் பொழுது போக்கிற்காக ஒர்லேண்டா டிஸ்ட்டினி பூங்காவிற்கு சென்று வந்தனர். பயண முடிவில் மியாமி பல்கலைகழகத்திற்கு சென்று பார்வையிட்டு வந்தனர்.

விண்வெளி மையம் தொடர்பாக நடைப்பெற்ற கட்டுரைப்போட்டியில் பள்ளியின் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீமதி முதலிடம் பெற்றதால் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.