.

Pages

Tuesday, December 17, 2019

தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து TNTJ ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.17
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்சா முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இ.முகமது கலந்துகொண்டு ஆற்றிய கண்டன உரையில்; 
மத்திய அரசு நிறைவேற்றிய இந்த மசோதாவால் முஸ்லீம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் அகதிகளாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது முக்கிய நோக்கமெனில் 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக இருந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்? மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் மத ரீதியில் பிரித்து சட்டம் நிறைவேற்றப்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இந்திய அரசியல் சாசனம் ஆர்டிக்கல் 14 மற்றும் 21 மத அடிப்படையில் குடிமக்களை பிரித்தாளக்கூடாது என்று கூறியுள்ளது. அனைத்து மக்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதே இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையாகும். ஆனால், இந்த மசோதாவை நிறைவேற்றி முஸ்லீம்களை மத்திய அரசாங்கம் வஞ்சித்திருக்கிறது' என்றார்.

இந்த ஆர்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஹாஜா ஜியாவுதீன், அப்துல்லா உள்ளிட்ட 1000 த்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், பல்கலை கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.