அதிராம்பட்டினம், டிச.03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் (ரலி) பள்ளிவாசல் மக்தப் பள்ளி மாணவர்களுக்கான மாதந்திரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிவாசல் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மக்தப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முகமது அபூபக்கர் தலைமை வகித்தார். மக்தப் பள்ளி ஆசிரியர்கள் மர்ஜூக் அலி, ஷாபிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் பிலால் (ரலி) பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகப் பொருளாளர் எம்.நிஜாமுதீன், சமூக ஆர்வலர் அதிரை அமீன் ஆகியோர் கலந்துகொண்டு, நவம்பர் மாத மாதாந்திரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற, பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்கள் அல் அமீன், அல் மூஃமீன், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஷஃபி, அலி அக்ரம், முகமது முனீர், அப்துல் பாசித் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
பிலால் (ரலி) மக்தப் பள்ளியில் மொத்தம் 67 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், குர்ஆன் பார்த்து ஓதுதல், அதன் உச்சரிப்பு, துஆ மனனம், சூரா மனனம், 5 வேளை தொழுகை, நல்லொழுக்கம், 100% வருகைப் பதிவேடு, பயிற்சித் தேர்வு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை மாதந்தோறும் தேர்வு செய்து பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.