.

Pages

Friday, December 6, 2019

அதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் படுகாயம்!

மின்வாரிய ஊழியர் சேகர் 
அதிராம்பட்டினம், டிச.06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). மின்வாரிய ஊழியர். பிள்ளைமார் தெருவில் அமைந்துள்ள மின் மாற்றியில் மின்சாரம் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உயர் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். 

4 comments:

  1. நலம்ப்பெற வேண்டுகின்றேன்

    ReplyDelete
  2. பூரன நலம் பெற்று மீண்டும் பணக்கு திரும்ப பிரார்த்திப்போம்....

    ReplyDelete
  3. குணமடைய பிரார்திப்போமாக ! Earth rod எமனையும் வெல்லும் ! ஆண்டவன் தான் இவர காப்பாற்றிருக்கான்.

    ReplyDelete
  4. பூரண நலம் பெற்று குணமடைய ஆண்டவனை வேண்டுவோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.