.

Pages

Tuesday, December 17, 2019

ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிரை அமீன் போட்டி!

அதிராம்பட்டினம், டிச.17
அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியை சேர்ந்தவர் அதிரை அமீன் (வயது 50) சமூக நலப் பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவரான இவர், எதிர்வரும் (30-12-2019) அன்று பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் கடந்த (14-12-2019) அன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இவரது வேட்பு மனு இன்று (17-12-2019) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்தல் நடத்தும் உதவி அலுவலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வேட்பாளர் அதிரை அமீன் பற்றிய சிறு குறிப்பு:
பெயர்: அதிரை அமீன் என்கிற முகமது அமீன்
தகப்பனார் பெயர்: மர்ஹூம் அம்பு ஹாஜா அலாவுதீன்
சகோதரர்: சமூக ஆர்வலர் மர்ஹூம் அப்துல் நாசர்
வயது: 50
வசிப்பிடம்: பிலால் நகர்,
படிப்பு: B.Sc.,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.