தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019-க்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.சோ.மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2,768 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 6,63,602 ஆண்களும் 6,87,199 பெண்களும் 69 மூன்றாம் பாலினத்தவரும் மொத்தம் 13,50,870 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இத்தேர்தலுக்காக, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகளான வார்டு வாரியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட்டது, வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது, வேட்புமனு பெற்றது குறித்தும் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் தொடர்பான இதர பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவரால் பார்வையாளரிடம் விளக்கி கூறப்பட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்.எஸ்.அனீஷ் சேகர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், அறிவுரைகள் ஆகியவற்றினை கண்டிப்புடன் பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை எந்தவித குறைபாடு இன்றி நேர்மையாகவும், சிறப்பாகவும் நடத்த வேண்டும் என்ற அறிவுரையை வழங்கினார். புகார்கள் ஏதேனும் இருப்பின் 8825890562 என்ற கைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.பழனி, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட நிலை முதன்மை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.