.

Pages

Sunday, December 8, 2019

மின்னொளியில் ஜொலிக்கும் செடியன் குளம்!

அதிராம்பட்டினம், டிச.08
அதிராம்பட்டினத்தின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவைக் கொண்டது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இக்குளத்தில் நீர் நிரம்பிக் காணப்படும்போது, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார அனைத்து சமுதாயப் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்து வருவர். மேலும், ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும் இக்குளம் உதவி வருகிறது.

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் செடியன்குளம் தண்ணீரால் நிரம்பி வழிந்தோடியது. இரவில் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கிக் காணப்பட்டது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து சென்றனர். வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) அமைப்பின் சார்பில், செடியன் குளக்கரையில் மின் விளக்கு அமைக்கப்பட்டது. இதனால், இரவில், குளக்கரை முழுவதும் ஒளி படர்ந்து மின்னொளியில் ஜொலிக்கிறது.

மின் விளக்கு வழங்கிய சமூக ஆர்வலர் அதிரை சம்சுல் ரஹ்மான் மற்றும் தனது நிதியில் மின் விளக்கை அமைத்துக்கொடுத்த TIYA அமைப்புக்கும், இப்பகுதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.