.

Pages

Thursday, December 5, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி (படங்கள்)

பேராவூரணி, டிச,04-
ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலை பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த ஆவணம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 4மாத காலமாக தற்காப்புக்கலை பயிற்சி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆசிரியர் மு.கருணாநிதி கூறுகையில், "கிராமப்புற பகுதியான இங்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், உடல் ஆரோக்கியத்துடன் திகழவும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்போடு சிலம்பாட்டம்,
கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது" என்றார்.

கடந்த 4 மாத காலமாக நடைபெற்று வரும் கராத்தே மற்றும் சிலம்பப் பயிற்சியில் 50 மாணவிகளும், 30 மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். வாரத்தில் திங்கள், செவ்வாய் என இரண்டு தினங்களுக்கு மாலை 2 மணி நேரம் கராத்தே பயிற்சியும், பிரதி வாரம் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் மாலை நேரத்தில் சிலம்பப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மாணவர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளித்து வருகிறார்.

9 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ்செல்வன், கார்த்திகேயன், மாணவிகள் மனீஷா, விஜயதர்ஷினி ஆகியோர் குறுகிய கால பயிற்சியில், நன்கு பயிற்சி பெற்று ஜொலித்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.அடைக்கலம் கூறுகையில், "எங்கள் ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் வசித்து வரும் மன்சூர் என்பவர் என்பவர் மாணவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிப்பதற்கான பொருளாதார செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு படிப்பு கெடாதவாறு, பள்ளி நேரம் முடிந்ததும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காரணமாக மாணவர்கள் படிப்பிலும் நன்கு கவனம் செலுத்தி வருகின்றனர்" என்றார்.

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியோடு, தற்காப்புக்கலை பயிற்சியும் அளித்து வரும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுக்கு பெற்றோர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.