.

Pages

Wednesday, December 11, 2019

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு!

கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 47-வது ஜவாஹா்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற பாப்பாநாடு பள்ளி மாணவி சி. அா்ச்சனாவை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவா் சி. அா்ச்சனா. இவா் நெகிழி என்கிற பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக உயிரி நெகிழி என்கிற பயோ பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவிலும், ஒரத்தநாடு கல்வி மாவட்ட அளவிலும், தஞ்சாவூா் மாவட்ட அளவிலும், பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் சி. அா்ச்சனா என்ற மாணவி பங்கு பெற்று தஞ்சாவூா் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றாா்.

இதன் பின்னா், மாநில அளவிலான 47 வது ஜவாஹா்லால் நேரு அறிவியல் கண்காட்சி கரூா் மாவட்டத்தில் அக். 31-ம் தேதி தொடங்கி டிச. 2-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், மாணவி சி. அா்ச்சனாவின் பயோ பிளாஸ்டிக் சாா்ந்த படைப்பு மாநில அளவில் முதலிடம் பெற்றது. இதன் மூலம் இப்படைப்பு தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதைத்தொடா்ந்து, ஆட்சியரகத்தில் மாணவி அா்ச்சனாவை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம். ராமகிருட்டிணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.