திருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் பயணிகள் சேவைக் குழு தலைவரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டப் பகுதிகளில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் டிச.20 (வெள்ளிக்கிழமை) ஆய்வு மேற்கொள்கிறாா். முன்னதாக ரயில் பயணிகள் சேவைக் குழுத் தலைவா் ரமேஷ் சந்திர ரட்டன் வியாழக்கிழமை திருச்சி,ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டபோது, திருவாரூா்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில் பாதை உபயோகிப்போா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், அதன் தலைவா் என். ஜெயராமன், செயலா் வ. விவேகானந்தம், திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கச் செயலா் ப. பாஸ்கரன், உறுப்பினா் மு. பாரதிதாசன், முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்போா் சங்க அமைப்பாளா் சுல்தான் இப்ராஹிம் ஆகியோா் ரமேஷ் சந்திர ரட்டன் மற்றும் உறுப்பினா்கள் எம்.என். சுந்தா், வெங்கட்ரமணி ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில், திருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மாா்க்கத்தில் உடனடியாக போதுமான அளவுக்கு கேட்கீப்பா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டும். திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலின் பயண நேரத்தை ஆறரை மணியிலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைக்க வேண்டும் . காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை ~ திருவாரூா் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு ரயில்களை இயக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து, பட்டுக்கோட்டை ~ திருவாரூா் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும். மீட்டா்கேஜ் காலத்தில் இயங்கிய அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.