.

Pages

Monday, January 6, 2020

ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு: பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் ஜமாத்தார்கள் வாழ்த்து!

அதிராம்பட்டினம், ஜன.06
அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா ஊராட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இதில், ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவராக எஸ்.சக்திவேல் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல், பிலால் நகர் 1-வது வார்டு கவுன்சிலராக ஜாஸ்மின் பானு (எம்.ஆர் கமாலுதீன்), எம்.எஸ்.எம் நகர் 2-வது வார்டு கவுன்சிலராக ரஹ்மத் (எஸ். முகமது தமீம்) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவருக்கும் பிலால் நகர் ஜமாத் மற்றும் எம்.எஸ்.எம் நகர் ஜமாத் சார்பில், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்த அதிரை அமீன் என்கிற ஏ.முகமது அமீன் இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,

பிலால் நகர் ஜமாத் சார்பில்...
ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர், எஸ்.முகமது முகைதீன், அஸ்ரப் அலி, எம்.நிஜாமுதீன், அதிரை அமீன், முகமது, இஜாஸ் அகமது, சேக்தாவூது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.எஸ்.எம் நகர் ஜமாத் சார்பில்...
இ.வாப்பு மரைக்காயர், முகமது வலீத், பிஸ்மில்லாக்கான், அல் அமீன்,  அப்துல் வஹாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


2 comments:

  1. வெற்றி பெற்றவர்கள் முஹல்லா வாரியாக ஊர் குறைகளை கேட்டறிந்து விபரமறியாத சில இல்லத்தரசிகளிடம் சில அறிவுறைகளை கூறி குறிப்பாக , முன் பின் தெரியாத யாரிடமும் எந்த விபரமும் தெறிவிக்க வேண்டாம் என்று வளியுருத்தவும் சமீபகாலமாக சில ஊர்களில் 2 போலீஸ் துணையுடன் குடும்ப உறுப்பினர்களிடம் மிரட்டி கையெலுத்து வாங்குதாக சமூக வலைதலங்களில் வதந்தி உலா ! கொஞ்சம் ஊர் நலன் கருதி செயல்படவும் ! உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு மெம்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.