.

Pages

Saturday, January 18, 2020

மதுக்கூரில் பிரமாண்ட மக்கள் எழுச்சி மாநாடு (படங்கள், தீர்மானங்கள்)

மதுக்கூர், ஜன. 18
இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில், தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு மதுக்கூர் தர்ஹா மைதானத்தில் (ஜன.17) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினர்களாக நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலப் பொதுச்செயலாளருமாகிய எம். தமீமுன் அன்சாரி, மே.17 இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலப் பேச்சாளர் பழனி ஃபாருக், தமிழ் விடுதலைப்புலி கட்சி குடந்தை அரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

மாநாட்டில், ஈழத்தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும், கேரளா, மேற்குவங்காளம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) நடத்த மாட்டோம் என்று எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதை போன்று தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், கன்னியாகுமரியில் காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் படுகொலையை வன்மையாக கண்டிப்பது, உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும், ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம்,  அலிகார் பல்கலைக்கழகம், ஜெ.என்.யூ ஆகிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் மத்திய அரசு, காவல்துறையை வன்மையாக கண்டிப்பது, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக போராடி வரும் மாணவர்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை வன்மையாக கண்டிப்பது, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக போராடி வரும் சந்திரசேகர் ஆசாதி, கண்ணையாக்குமார் போன்றோர் மீது அத்துமீறலை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் மதுக்கூர் ஃபவாஸ்கான் தலைமை வகித்தார். மதுக்கூர் ராவூத்தர்ஷா வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை, சேக் அஜ்மல் தொகுத்தளித்தார். நிறைவில், இம்தியாஸ் நன்றி கூறினார்.

முன்னதாக, விதைகள் கலைக்குழு, சி.எப்.ஐ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்)ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரி செல்லிடப்பேசியில் விளக்கு எரியவிட்டு முழக்கமிட்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.