அதிராம்பட்டினம், ஜன.08
அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று (08-01-2020) புதன்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்தார்.
சமூக ஒற்றுமை, சமூக மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகியவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டு, அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா கூட்டமைப்பை தொடங்குவது எனவும், இதில், தலைவராக எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் (சம்சுல் இஸ்லாம் சங்கம்), துணைத்தலைவராக பி.எம்.கே தாஜுதீன் (மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம்), செயலாளராக எம்.நெய்னா முகமது (தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி), பொருளாராக ஏ.தாஜுதீன் (கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முஹம்மதியா சங்கம்), துணைச்செயலாளராக பி.எம்.எஸ் அமீன் ( கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி), இணைச்செயலாளராக டி.ஏ அகமது அனஸ் (புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி), ஒருங்கிணைப்பாளராக ஜபருல்லா (நெசவுத்தெரு மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம்), ஆலோசகர்களாக எம்.நிஜாமுதீன் (பிலால் நகர் ஜமாத்), இ.வாப்பு மரைக்காயர் (எம்.எஸ்.எம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி) ஆகிய 9 பேரைக் கொண்ட நிர்வாகக் கமிட்டி அமைக்கப்பட்டது. தவிர நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு 3 பேர் கொண்ட உலமா பெருமக்கள், சட்ட ஆலோசகர் ஒருவர், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தலா ஒருவர், ஆகியோரை அமைப்பில் இணைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அடுத்த ஆலோசனைக் கூட்டத்தை எதிர்வரும் (16-01-2020) அன்று வியாழக்கிழமை மாலை அதிரை ஜாவியா வளாகத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், சமுதாய அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.