.

Pages

Tuesday, January 21, 2020

சாவிலும் இணைபிரியாத அதிராம்பட்டினம் தம்பதிகள்: கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு!

அதிராம்பட்டினம், ஜன. 22
அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தழகு பிள்ளை (வயது82), அவரது மனைவி புஷ்பவள்ளி (76). இவர்களுக்கு ஒரே மகன் பாலகிருஷ்ணன். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவியான முத்தழகு பிள்ளை, புஷ்பவள்ளி ஆகிய இருவரும் திருமணம் ஆன காலம் தொட்டு இணைபிரியாத தம்பதிகளாக ஒருவருக்கொருவர் அன்புடனும் பாசத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். உறவினர் வீட்டுக்கு சென்றாலோ அல்லது வேறு ஏதாவது விசேஷங்களுக்கு  சென்றாலும்  இணைபிரியாமல் சென்று வருவார்களாம்.

இந்த நிலையில் நேற்று இரவு கணவன் முத்தழகு பிள்ளை உடல்நிலைக் குறைவால் இறந்தார்.  இதனால் தனது உயிருக்கு உயிரான கணவரை இழந்து விட்டோமே என்ற அதிர்ச்சியில் அவரது மனைவி புஷ்பவள்ளிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே  இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கணவன், மனைவி இருவரது உடலையும் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டுக்கு கொண்டு வந்து இருவரது உடல்களையும் அருகருகே  வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் இருவரது உடல்களையும் ஒன்றாக மயானத்திற்கு எடுத்து சென்று அங்கு  உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர். சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதிகள் வாழ்ந்த நினைவுகளை பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.