.

Pages

Sunday, January 26, 2020

ஊர் போற்றும் 'தியாகி அப்பா' அதிராம்பட்டினம் அப்துல் ஹமீது!

அதிரை நியூஸ்: ஜன. 6
இந்திய சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் கட்டமைக்கபட்ட இந்திய நேஷனல் ஆர்மியில் INA (India national army) தன்னார்வமாக கலந்துகொண்டு சிறப்பு பயிற்சி பெற்று விடா முயற்சியால் முக்கிய பதவிகளைப் பெற்று பல பதக்கங்களை வாங்கி நெஞ்சில் அணிந்து (சில வருடங்கள் முன்புவரை) அதிரையில் கம்பிரமாக வீரநடை போட்ட தியாகி E.S.அப்துல் ஹமீது அவர்கள்.

இவர், தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்த காலஞ்சென்ற முகமது சேக்காதி அவர்களின் மகனாக கடந்த 20.1.1926 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது முதல் தேசநலன், தேசபற்று மிக்கவராக திகழ்ந்தவர்.

சுதந்திர போராட்டத்தில் காந்தியின் அஹிம்சை வழி பின்பற்றியோரில் பலர் இருந்தாலும், வெள்ளையனை அவன் பாணியிலேயே விரட்டி அடித்தால்தான் இந்தியா நாடு சுதந்திரத்தை உடனடியாகப் பெற முடியும் என்கிற நேதாஜி  சுபாஷ் சந்திர போஸின் கருத்தை பின்பற்றி, அவரோடு சென்ற  இளைஞர்கள் சிலரில் தியாகி அப்துல்ஹமீது அவர்களும் ஒருவர். இவர், இயல்பிலேயே முரட்டுதனம் மிக்கவர் என்பதால் நேதாஜியின் இந்திய சுதந்திர விடுதலைப் போர் அவருக்கு பிடித்துபோனது.

தியாகி அப்துல் ஹமீது அவர்கள் தாய்நாட்டின் விடுதலை வேட்கையால் வெள்ளையனை விரட்ட ஓடோடி சென்று INA வில் தன்னை இணைத்து கொண்டார். தேசபற்றும், விடுதலை வேட்கையும் அவர் நெஞ்சிலே உரமேறி இருந்ததால் சிறப்பான பயிற்சியாலும் அதிரடி நடவடிக்கையாலும் NIA ராணுவத்தில் பல பதக்கங்களை நெஞ்சில் ஏற்றுகொண்டார்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் திட்டபடி சிங்கப்பூரிலிருந்து கிளம்பி, மலேசியாவில் ஒன்றுகூடி, பர்மா வழியாக, இம்பாலில் இறங்கி டெல்லி வரை சென்று ஆங்கிலேயனுக்கு எதிராக அதிரடி போர் புரிந்து அவர்களை விரட்டுவது என முடிவானது. இதற்காக, மலேசியாவில் INA அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டார்.

வெள்ளையனை கொலை நடுங்க செய்த பல தாக்குதல்கள் INA வால் மேற்கொள்ளபட்டது. இப்படியாக சுதந்திர போரில் தன்னை இணைத்துகொண்ட அப்துல் ஹமீது அவர்கள் கடந்த 14.10.2001 அன்று மரணமடைந்தார்.

'தியாகி அப்பா' என அதிராம்பட்டினம் பகுதியினரால் அன்புடன் அழைக்கபட்ட அப்துல் ஹமீது அவர்கள் தனது வீட்டு வாசலில் ஒவ்வொரு சுதந்திரதினம், குடியரசு தினத்தன்றும் இந்திய தேசிய கொடி ஏற்றிவைத்து, பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவதை வாடிக்கையாகபின்பற்றுபவர்.

அதுமட்டுமின்றி தன் வாழ்நாள் முழுதும் INA அமைப்பின் சீருடை அணிந்துகொண்டு அவர் பெற்ற வீரப்பதக்கங்களை நெஞ்சில் அணிந்துகொண்டு வீரநடை போடும் அதிரை தியாகி அப்துல் ஹமீதை பார்க்கும் பலர் இவரது கம்பீரமான தேசபற்றை கண்டு வியந்து போவர். அந்தளவு INA அமைப்பின் மீதும், இந்திய தேசத்தின் மீதும் அதிகப் பற்றும், பாசமும் கொண்டவர் அதிரை தியாகி அப்பா அப்துல் ஹமீது. இந்நாளில் அவரை நாம் நினைவுகூர்வோம்.

- அதிரை உபயா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.