அதிராம்பட்டினம், ஜன.17
அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், அதிரை ஜாவியா வளாகத்தில் (16-01-2020) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்தார். கூட்டத்தை, ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். மவ்லவி. ஏ.எஸ் அகமது இப்ராஹீம், மவ்லவி. எம்.முகமது மீரான், மவ்லவி. சபியுல்லா அன்வாரி மற்றும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அவ்வமைப்பின், செயலாளர் ஹாஜி எம்.நெய்னா முகமது அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முஹம்மதியா சங்கம், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி, நெசவுத்தெரு மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம், பிலால் நகர் ஜமாத், எம்.எஸ்.எம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி, பெரிய தைக்கால் தெரு மக்கா மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டி ஆகிய மஹல்லா நிர்வாகிகள், அதிரை அனைத்து மஹல்லா இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, என்.டி.எப் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர். நிறைவில், அவ்வமைப்பின் ஆலோசகர் எம்.நிஜாமுதீன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.