.

Pages

Saturday, January 11, 2020

புற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் இளம் பெண்ணுக்கு உதவ கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஜன.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் பர்ஷானா (வயது 27). தாய், தந்தையை இழந்தவர். இவரது உடன் பிறந்த சகோதரிகளின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வயிற்றில் கட்டி உண்டாகி அதில் வலி ஏற்பட்டதாம், பின்னர், பட்டுக்கோட்டையில் மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனை செய்ததில் புற்று நோய்க்கான அறிகுறி இருப்பதும், உடலில் ஆங்காங்கே கட்டிகள் பரவி வருவதும் தெரியவந்தது. ஏற்கனவே, இவருக்கு வயிற்றுப் பகுதியில் பரவி இருந்த 2 கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இதையடுத்து கேரளா, பெங்களூர் போன்ற இடங்களில் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்த நிலையில், தற்போது உடலின் பல பகுதிகளில் கட்டிகள் வேகமாக பரவி வருவதால், மருத்துவர் அறிவுரையின் பேரில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர  சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இதுவரையில் ஆனா மருத்துவ செலவுக்கு பெண்ணின் குடும்பத்தார் பலரிடம் கடன்பட்டும், உதவிகள் பெற்றும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டனர். எனினும் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,
'ஹீமோதெரபி' எனும் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். இதற்கு, சுமார் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் என மருத்துவமனை வட்டாரம் கூறிவிட்டதால், இந்த ஏழைப் பெண்மணியின் குடும்பத்தாரால் போதிய நிதியை திரட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இக்குடும்பத்தார் நம்மின் உதவியை நாடி வந்துள்ளனர்.

எனவே, இவருக்கு உதவ எண்ணுவோர், நேரடியாக பர்ஷானா குடும்பத்தாரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மூலமாகவோ அல்லது இஸ்லாமிய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

பர்ஷானா குடும்பத்தார் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : BARSHANA
Bank Name :  INDIAN BANK
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 6839212147
IFSC Code: IDIB000A110

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
0091 9629235935  / 0091 9500696471 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.