தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ரயிலடியில் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (23.01.2020) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்கள், அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்பேரணியானது ரயிலடியில் தொடங்கி ஆற்றுப்பாலம், அண்ணா சிலை வழியாக சென்று அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்று, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
கள்ளச்சாராயத்தினால் பசியின்மை, உடல்நலக்குறைவு, நினைவாற்றல் குறைவு, நரம்புத்தளர்ச்சி, கண் பார்வை குறைவு, கல்லீரல் பாதிப்பு, மூளை செயலிழப்பு, வாகன விபத்து ஆகியவை ஏற்படும் எனவும், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.