.

Pages

Thursday, January 23, 2020

அதிராம்பட்டினம் M.M.S குடும்ப உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.23
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமையில், ஒட்டுமொத்த எம்.எம்.எஸ் குடும்ப உறுப்பினர்களும் திமுக தஞ்சை தெற்கு மாவட்டச்செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ முன்னிலையில் இன்று (23-01-2020) வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனர்.

அப்போது, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், திமுக மாவட்ட கலை, இலக்கியப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி. பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் பா.இராமநாதன் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து எம்.எம்.எஸ் குடும்பத்தார் கூறியது;
'எங்கள் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் இன்று திமுகவில் இணைந்து மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தளபதி ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் மக்களுக்கு நல்லாட்சி தரமுடியும். சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு அரணாகத் திமுக திகழ்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து தீவிரமாக களப்பணியாற்றுவோம்.

எங்களை இன்முகத்துடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்த கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச்செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பட்டுக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள், அதிராம்பட்டினம் பேரூர் மற்றும் வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி' என்றனர்.



 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.