காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான கேட்களுக்கு பணியாளர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அஜய்குமாரிடம் மக்களவை உறுப்பினா்கள் சு. திருநாவுக்கரசா் (திருச்சி), எம். செல்வராஜ் (நாகை) ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் ஆகியோா் தலைமையில், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருவாரூா் ஆகிய பகுதிகளின் ரயில் உபயோகிப்போா் சங்கப் பிரதிநிதிகள் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அஜய்குமாருடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது எம்.பிக்கள் கூறியது;
காரைக்குடி ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் கேட்களுக்கும் உடனடியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களைத் திரட்டிப் போராடுவோம். மக்கள் பாதிப்புள்ளாக்கும் ரயில்வே பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண முன்வர வேண்டும். மக்களவை கூட்டத்தொடர் ஓரிரு நாட்களில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், ரயில்வே நிதி அமைச்சர்களிடம் பேசி ஆவன செய்ய மேலும் வலியுறுத்துவோம். எனத் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து கோட்ட மேலாளர் கூறுகையில்;
கேட் கீப்பர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
கூட்டத்தில், திருச்சி கோட்ட மேலாளா் (இயக்கம்) பூபதி ராஜா, மேலாளா் (இயக்கம்) நரேன், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருவாரூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளின் ரயில் உபயோகிப்போா் சங்கப் பிரதிநிதிகள் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன், ஹாஜி ஏ. அப்துல் ரெஜாக், ஹாஜி மு.செ.மு ராபியா, ஹாஜி பத்ருத்தீன், வ.விவேகானந்தன், கலிய பெருமாள், ஹாஜி சுல்தான் இப்ராஹீம், ப.பாஸ்கரன், பாரதி, ஜெர்மன் அலி, ராஜ்குமார் ஆகியோா் உடனிருந்தனா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.