அதிரை நியூஸ்: ஜன.26
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு 'இந்தியன் நேஷனல் ஆர்மி (INA)'.
இந்த அமைப்பில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்கள் காலஞ்சென்ற பெரிய மின்னார் மு.முகம்மது ஷரிப், செய்யது முகம்மது ஆகியோர் பணி புரிந்து நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக கடமையாற்றியவர்கள். இவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர் ஆவார். இவர்கள் இருவருமோ அல்லது இவரது குடும்பத்தாரோ அரசிடமிருந்து எவ்வித சலுகையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதேபோல் அதிராம்பட்டினம் தியாகிகள் காலஞ்சென்ற எஸ்.எஸ் இப்றாஹீம், அப்துல் ஹமீத் ஆகியோர் நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்து நமதூருக்கு மேலும் பெருமை சேர்த்தவர்கள் ஆவார்.
இவர்களை போல் அதிராம்பட்டினம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்தும், மறைக்கப்பட்டும் உள்ளார்கள். அன்னார்கள் அனைவரையும் கண்டறிந்து வரலாற்று ஏடுகளில் பதியப்பட வேண்டும். இந்தியா குடியரசு பெற்று 71 ஆண்டுகள் துவங்கிய நிலையில், இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட அதிராம்பட்டினம் பகுதித் தியாகிகளை நினைவில் கொள்வோம். மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
- சேக்கனா நிஜாம்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.