.

Pages

Saturday, January 25, 2020

சேதுபாவாசத்திரத்தில் பாய்மரப் படகுப் போட்டி (படங்கள்)

பேராவூரணி, ஜன,25-
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள சேதுபாவாசத்திரம் மீனவக் கிராாமத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில், பாரதத்தாய் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 25 ஆவது ஆண்டு பாய்மரப் படகுப் போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது.

இதில் முதல் பரிசு 25 ஆயிரத்து 20, இரண்டாம் பரிசு 20 ஆயிரத்து 20, மூன்றாம் பரிசு 15 ஆயிரத்து 20, நான்காம் பரிசு 10 ஆயிரத்து 20 வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்பட்டது.

சுமார் 5 கிமீ தூரம் வரையிலான போட்டியில், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 22 பாய்மரப் படகு அணிகள் கலந்து கொண்டனர் . விசைபடகு மீனவர் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் பாய்மரப் படகுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில், தொண்டியைச் சேர்ந்த வேலாயுதக்காரன் சூலக்காரன் வேலாயுதம் படகு முதலிடத்தையும், வடக்கு புதுக்குடியைச் சேர்ந்த முத்துவேல் படகு இரண்டாமிடத்தையும், தொண்டியைச் சேர்ந்த கருப்பையா படகு மூன்றாமிடத்தையும், தொண்டியைச் சேர்ந்த வேலம்மாள் படகு நான்காமிடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற படகு அணிகளுக்கு பரிசுத்தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. இதில் கிராமத்தினர், இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.