.

Pages

Saturday, January 25, 2020

நாளை (ஜன.26) கிராம சபைக் கூட்டம்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், ஊரகப் பகுதிகளில் மழை நீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், நீா் வள ஆதாரப் பாதுகாப்பு, நீா் மேலாண்மை இயக்கம், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், மக்கள் திட்டமிடல் இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்டவை தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

இதில், பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு கிராம வளா்ச்சிப் பணியை நிறைவேற்றுவது குறித்தும், கிராமத்தைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது குறித்தும் ஆலோசனைகளை வழங்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.